Posts

"செருப்பை திண்கிறேன்" கவிதையில் சமூகப் பார்வை...!

Image
சு. சிவனேஸ்வரன் MA., NET.,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை.   முன்னுரை              நம்முடைய நாட்டில் தன் பாலின ஈர்ப்பாளர்கள்  சமுதாய சூழல்களை எதிர்கொள்வது என்பது அன்றாடம் புதிய அனுபவங்களாக தான் அமைகின்றது. பொது இடத்தில் மதிப்பின்மை, நண்பர்களிடத்தில் தகாத பேச்சு, ஒதுக்கி வைத்தல், தகாத வார்த்தைகளால் புண்படுத்துதல் சமூக ஊடகங்களினுடைய தாக்கம், சமூகத்தில் அக்கறை கொள்ளாத மனிதர்கள் என ஏராளமான காரணங்களால் மனதாலும் உடலாலும் பாதிக்கப்படுகின்றனர். எத்தனையோ பாதிப்புகள் உண்டான போதிலும் இச்சமுதாயத்துக்குத் தேவையான ஒரு இலக்கியமாவது படைக்க வேண்டும் என்று தமிழ் இலக்கிய சமுதாயத்திற்கு சில ஊன்றுகோல்களை நிறுத்தி வைக்கின்றார்கள் எழுத்தாளர்கள். திருநங்கைகள் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றி மட்டுமே எழுதினால் என்ன? அவையும் எழுத்துக்கள் தான் என்பதனை மக்கள் தான் புரிந்து கொள்வதில்லை.   புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பிரியா பாபு நர்த்தகி நடராஜ் (நடனம்) தனுஜா நேகா மரக்கா அழகு ஜெகன் அருண் கார்த்திக் அக்னி பிரதீப் ( இன்னும் தொடரும்….) போன்ற கவிஞர்கள் இலக்கிய சமுதாயத்தில் பெரும்பங்காற்ற

"பொழுதுபோக்கில் - Brookefields Mall பெரும் இடம்" - சு. சிவனேஸ்வரன்.

Image
"பொழுதுபோக்கில் - Brookefields Mall பெரும் இடம்" சு. சிவனேஸ்வரன் எம். ஏ, தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.   பொழுதுபோக்கு என்பது :        ஒரு பொழுதுபோக்கு என்பது வழக்கமான செயலாகும், இது மகிழ்ச்சிக்காக செய்யப்படுகிறது. பொழுதுபோக்குகள் உற்சாகத்தையும் வாழ்க்கையை வளப்படுத்தும் இன்பத்தையும் தரும். உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைக்கூற உதவும் பல்வேறு வகையான பொழுதுபோக்குகள் உள்ளன.   பொழுதுபோக்கின் வகைகள் :- > செறிவூட்டல் பொழுதுபோக்குகள், >விளையாட்டு, >சமூக செயல்பாடுகள், >ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகள், >சேகரித்தல், >தயாரித்தல் மற்றும் டிங்கரிங் செய்தல், >வெளிப்புற பொழுதுபோக்கு, >உள்நாட்டு பொழுதுபோக்குகள்..  என மேற்கண்ட வகையிலான பொழுதுபோக்குகள் நம்மிடையே இருக்கின்றது. அந்த வகையில் நாம் கொஞ்சம் ஆடம்பரமான பொழுதுபோக்கையும் விரும்புகின்றோம். அப்படி ஆடம்பரமாக விரும்புகின்ற போது பெரிய ஊர்களில் இருக்கின்ற மால்களுக்குச்(Mall) செல்வோம். அவ்வாறு ஒரு ஆடம்பரமான பொழுதுபோக்கு இடம்தான் கோவையில் அமைந்துள்ள

கொங்கு நாடு - கவிதை...!

Image
சு. சிவனேஸ்வரன் எம். ஏ., தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. கொங்குநாடு பற்றிய கவிதை பிரசுரம் ஒன்று...!  கொங்கு நாடு - கவிதை..! காவிரி நதி போல எங்க நெஞ்சம் தான் இருக்கும் எப்போதும் மரியாதையா ஏங்கோன்னு பாடிருக்கும்..! மஞ்சளுக்கு பேர் போன ஈரோட்டு மக்களுங்க  மாரியம்மன் கோவிலுக்கு மண் வீசும் சொந்தமுங்க..! குடகு மலை ஓரத்துல குடிகட்டி வாழ்ந்தமுங்க சொந்தம் சொல்லி வந்தீங்கனா  சொத்து எழுதி தருவோங்க..! நெல்லு குத்தும் சத்தம் எல்லாம் அத்தானியில கேட்குமங்க செம்மண் செங்கலுக்கு அந்தியூரு இருக்குதுங்க…! சந்தன வாசத்துக்கு சத்திய மங்கலோங்க மாட்டுச்சந்த வாரத்துக்கு புளியம்பட்டி போகணும்ங்க…!  வண்ண பட்டு வேணும்னா திருப்பூர் போகணுங்ண்ணா பருத்தி துணி வேணுமுன்னா கோயம்புத் தூருங்கண்ணா…! ஆறுபடை வீட்டிலொரு பழனி மலை இருக்குதுங்க கிழக்குப் பக்க எல்லையாக குளித்தலை அமைஞ்சதுங்க…!  தேவாரம் பாடுனாங்க பவானி கரையிலங்க கொடுமுடிநாதருக்கு கோயில் கட்டி வச்சாங்க…! பக்தியாக வந்தீங்கன்னா பண்ணாரி கோயிலுங்க வெயிலுக்கு சூடுதணிக்க கொடிவேரி ஓடுதுங்க…!  கொங்குநாடு எங்களுக்கு பெற்றெடுத்த தாய் போல கொங்கு மொழி எங்கள

உணவுப் பண்பாட்டில் - வாழைப்பழம் சார் உணவுகள்..!

Image
சு. சிவனேஸ்வரன், முதுகலைத் தமிழ், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். உணவுப் பண்பாட்டில் -  வாழைப்பழம் சார் உணவுகள்..! ஆய்வுச் சுருக்கம் : நம்முடைய தமிழகப் பகுதி மக்களிடையே வாழைப்பழம் சார்ந்த உணவுகள் அதிகமாய் செய்யப்படுகின்றது. அதில் நெருப்பைப் பயன்படுத்தி செய்கின்ற சமையலும், நெருப்பை பயன்படுத்தாமல் செய்யப்படுகின்ற சமையலும் இக்கட்டுரையில் கூறப்படுகிறது.  முன்னுரை:  தமிழருடையப் பண்பாடு என்பது உணவு, உடை,  இருப்பிடம் என்ற மூன்று பெரும் கூறுகளைக் கொண்டுள்ளது. இதில் உணவு என்பதுதான் முதன்மைப் பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான மிகவும் பயன்படக்கூடிய உயிர்ச் சாதனம் உணவுதான். இந்த உணவு வரிசையில் சங்க இலக்கியம் தொட்டு தனக்கென ஒரு பங்கை வகிக்கிறது வாழைமரம். அந்த வாழை மரத்திலிருந்து கிடைக்கும் வாழைப்பழத்தைக் கொண்டுச் செய்யப்படும் பல்வேறு  உணவு வகைகளைக் கட்டுரை கூறுகிறது. உணவுப் பண்பாடு :  பண் என்பது - செய்  என்னும் பொருள் தரும். பாடு - என்பது  தொழில். அக்காலம் தொட்டே செய்யப்படும் செயல் என்றவாறு கூறப்படுகிறது. அன்று சங்ககாலத்தில் வாழைப்பழத்தை

காற்றில் அசைகிற காலம் - கவிதையில் தாய்மை!! - சு. சிவனேஸ்வரன்

Image
காற்றில் அசைகிற காலம் - கவிதையில் தாய்மை! நூல் : காற்றில் அசைகிற காலம். கவிஞர் : ஆ. சுந்தர செல்வன். வகை : ஹைக்கூ. அகறி வெளியீடு. முன்னுரை : என் செயினும் தாயின் சிறந்த தமரில்லை ( நான். 35: 1-2) > என்ற வரிகள் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய தாயை விடச் சிறந்த உறவு வேறில்லை என நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது. நனைமுதிர்........ தாய்உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு அன்னாய் என்னும் குழவி’5 (குறுந்.397)  > என்ற பாடல் தாய்க்கும் குழந்தைக்கு உள்ள உறவினை விளக்குகிறது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் - என்று திருக்குறள் பேசுகிறது!  தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை …!  > இப்பாடல் எப்பொழுதும் நம் மனதை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அன்னை நம்மை பெற்றிடலும், அன்னையை நாம் பெற்றிடலும் வரமே! அன்னையின் அன்பும் காதலும், காற்றில் அசைகின்ற காலம் கவிதை நூலில் அமைந்திருக்கின்ற பாங்கை இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது. பொருளுரை : காற்றில் அசைகிற காலம் கவிதையில் காணப்படும் தாய்ம

தொடை அறியலாம் வாங்க..!

Image
தொடைகளை அறியலாம் வாங்க..! சு.சிவனேஸ்வரன் எம். ஏ.,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை.  முன்னுரை :- தொடை என்று சொன்னவுடனே முதலில் நாம் நினைப்பது கால்களையாகத்தான் இருக்கும். ஆனால், இலக்கணத்தில் சொல்ல வருவது அந்தத் தொடை அல்ல, எழுத்துக்களிலும், சீர்களிலும்,  அடிகளிலும் பயின்று வருகின்ற எழுத்துக்களைத் " தொடை"  என்று அழைப்பதுண்டு., இது பொதுவானக் கூறு தொடை என்றால் என்ன?  என்பதைத் தொல்காப்பியர் வழி காண்போம். தொடை:- தொடை என்பது தொடுக்கப்படுதல் அல்லது கட்டப்படுதல் என்பது பொருளாகும். அதாவது ஒருநூலில்(நாரு) சம்பங்கி, மல்லிகை, ரோஜா போன்றவற்றைக் கலந்து கட்டி மாலை ஆக்குவது போல செய்யுலின் உறுப்புகளையும் எழுத்துக்களையும் கலந்து கட்டி ஒரு கோர்வையாக ஆக்குவது தொடையாகும். மாலையின் அழகிற்கு ஏற்ப எப்படி பூக்களை மாற்றி மாற்றி கட்டுகிறார்களோ அதுபோல் செய்யுளின் அழகிற்கு ஏற்ப உறுப்புகளை மாற்றி மாற்றி அடிகள் தோறும் தொடுக்கப்படுவது தொடை ஆகும். தொடையின் வகைகள்:-  தொல்காப்பியரின் வழி தொடையின் வகைகளை பத்து வகைகளாக கூறலாம்., அவைகளான 1.மோனை 2.எதுகை 3.முரணே  4.இயைபு 5.அளபெடை 6.பொழிப்பு

அழைப்பதில் குழப்பமா?

Image
  அழைப்பதில் குழப்பமா?  அதை இங்கு அறிந்து கொள்ளலாம்.. இங்கனம், சிவனேஸ்வரன் எம். ஏ., தமிழ்த்துறை. முன்பின் தெரியாத ஒரு நபரை எவ்வாறு அழைப்பது என்ற  கேள்விக்கு நாம் உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். இப்பொழுதெல்லாம் யாரைப் பார்ப்பினும் ஆணாக இருந்தால் "Bro", பெண்ணாக இருந்தால் "Sis" என்று அழைக்கிறோம். தாய்த்தமிழ் நாட்டில் தமிழ் மக்களை அழைப்பதற்கு தமிழராகிய நமக்கு தமிழ் மொழி இருக்க, ஆங்கிலம் ஏன்? சரி அதை விடுங்கள் எதற்கு மொழி பிரச்சனை…. இப்போது தொல்காப்பியர் வழி நின்று, முகம் தெரியாத ஒருவரை அழைப்பது எப்படி என்று பார்ப்போம்....  நம்மூர் பாட்டி எல்லாம் கண்ணின் மேல் கை வைத்து   அது யார் வர்றது?...  அது யாரப்பா? என்று கேட்டிருப்பதை அறிந்திருப்போம். ஆனால் இது தவறான சொல். எப்படி என்றால் அது என்பது அஃறிணையைக்  குறிக்கக்கூடிய சொல்., யார் என்பது உயர்திணைச் சொல்லக்கூடிய சொல்., இங்குதான் இலக்கணம் மீறுகிறது. முறைப்படி வருகிறவர் யார்? வருபவர் யார்? அவர் யார்? அல்லது அவள் யார்? யார் அவள்? இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தலாம்.  இதுவே நாய் பசு மாடு கோழி பன்றி இப்படி